இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்இன்று 4-ஆவது சுற்று: முதல் வெற்றி முனைப்பில் குகேஷ் - சிண்டாரோவ்‘காசி தமிழ் சங்கமம்-5’ இன்று தொடக்கம்: வாரணாசி வந்தது தமிழகத்தின் முதல் குழு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு தொகுதி மறுசீரமைப்பு மசோதா: எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை: திமுகவுக்கும் அழைப்புநோய் எதிா்ப்பு மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்ற 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிகந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகைக்காக வந்த முஸ்லிம்கள்

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிகந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகைக்காக வரும் முஸ்லீம்கள் குறித்து...

Locals gather at Sikandar Badusha Dargah atop Thiruparankundram Hill to offer special prayers

திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள ஹஜ்ரத் சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்கா - கோப்புப்படம்

Updated On :

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள ஹஜ்ரத் சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்காவில், சிறப்புத் தொழுகைக்காக, கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் உள்ளூர் முஸ்லிம்களும் தீவிர பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இந்த் சிறப்புத் தொழுகைகளில் பங்கேற்பதற்காக தர்காவுக்கு வந்தனர். அதிகாலையிலேயே மக்கள் அங்கு கூடத் தொடங்கிய நிலையில், மலை மேல் உள்ள தர்காவிற்குச் செல்லும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

சனிக்கிழமை காலை 6.15 மணி முதல், பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வருகை தந்தவர்களை வரிசையில் நிற்க வைத்து, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை காவல்துறையினர் சேகரித்தனர். கடுமையான பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பிறகே, தொழுகைக்கு வந்தவர்கள் மலை மேல் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

முறையான சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முடித்த பின்னரே பார்வையாளர்கள் தர்காவிற்குச் செல்ல முடியும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேலும், தொழுகைக்காக 100-க்கும் மேற்பட்டோர் தர்காவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் குவிப்பு

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காக மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து சிஆர்பிஎஃப் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய துணை ராணுவப் படையின் ஒரு பிரிவு அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், உயர் அதிகாரிகளிடமிருந்து அடுத்தகட்ட உத்தரவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை, மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூண் கல் தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த நிகழ்வில் அனைத்து பக்தர்களும் பங்கேற்க அனுமதித்த நீதிமன்றம், நிகழ்வு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய மத்திய ரிசர்வ் காவல் படையினரை பணியமர்த்தவும் உத்தரவிட்டிருந்தது.

திருபரங்குன்றம் மலை மேல் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தும், அங்கு தீபம் ஏற்றப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருடாந்திர கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒரு பகுதியாக, தீபத்தூணுக்குப் பதிலாக உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே 'மகா தீபம்' ஏற்றப்பட்டது. இதற்கிடையே, திட்டமிடப்பட்ட நிகழ்வுக்கு முன்னதாக, தீபத்தூண் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Locals and visitors from various areas, including Kerala, gathered at the Hazrat Sultan Sikandar Badusha Auliya Dargah, located atop Thiruparankundram Hill in Madurai, on Friday morning to offer special prayers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.