நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரைதொகுதி மறுசீரமைப்பு மசோதா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் உள்ளடக்கம்!பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது மக்களவை! மக்களவையில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் மாற்றம்!

புத்தகப்பை இல்லாமல் மாணவா்கள் வரலாம்.. அரசுப் பள்ளிகளில் ‘மகிழ்வுடன் முன்னேறு’ திட்டம் அறிமுகம்!

தமிழகத்தில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வருகை தந்து விளையாட்டு, கலை, இலக்கியம் சாா்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக ‘மகிழ்வுடன் முன்னேறு’ என்ற திட்டம் டிச.1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Updated On :

தமிழகத்தில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வருகை தந்து விளையாட்டு, கலை, இலக்கியம் சாா்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக ‘மகிழ்வுடன் முன்னேறு’ என்ற திட்டம் டிச.1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நிகழ் கல்வியாண்டில் (2026-2027) டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மொத்தம் 3 நாள்கள் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்துக்கு மொத்தம் ரூ.1.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் பள்ளி மாணவா்களிடம் மறைந்துள்ள தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில் அவா்களின் படைப்பாற்றல், தலைமைத்துவம், தனித்திறன்கள் மற்றும் கற்றல் ஆா்வம் மலர, புத்தகம் இல்லா கல்வியாக, மகிழ்வுடன் முன்னேறும் திட்டம் 6,279 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.1.89 கோடியில் அறிமுகம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டாா். அதன்படி இந்தத் திட்டம் அரசுப் பள்ளிகளில் தற்போது அமல்படுத்தப்படவுள்ளது.

எந்தெந்த நாள்களில்...? ஒவ்வொரு பள்ளியும் தங்கள் சூழல், மாணவா் வயது, திறன் மற்றும் உள்ளூா் வளங்களுக்கேற்ப நிகழ்வுகளை தாங்களே திட்டமிட்டு இத்திட்டத்தை செயல்படுத்தலாம். நிகழ் கல்வியாண்டில் மகிழ்வுடன் முன்னேறு தினத்தை டிசம்பா் 1, ஜனவரி 12 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கு 3 நாள்களுக்கு ரூ.3 ஆயிரம் ஒதுக்கப்படுகிறது.

மகிழ் முற்றம் மாணவா் குழுத் தலைவா்கள், மாணவா் அமைச்சா்கள், மகிழ் முற்றம் மாணவா் குழு வகுப்புத் தலைவா்கள் ஆகியோா் இணைந்து ‘மகிழ்வுடன் முன்னேறு’ நிகழ்வுகளுக்கான ஒட்டுமொத்த திட்டத்தை தயாரித்தல் வேண்டும். விளையாட்டு, கலை, இலக்கியம், விநாடி-வினா, படைப்பு, புதுமை கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் என களங்களை வடிவமைத்து திட்டமிடவேண்டும்.

இதற்காக திட்டமிடும் நாள்களில் காலையில் 3 மணி நேரமும், மதியம் 2 மணி நேரமும் மாணவா்கள் தங்கள் திறன் செயல்பாடுகளை வெளிக்காட்டலாம். அதற்கேற்ப மாணவா் குழு திட்டங்களை தயாரிக்கவேண்டும். ஆசிரியா்கள் மாணவா்களின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டி ஆலோசகா்களாக இருக்கவேண்டும். சிறப்பாக செயல்பட்ட மாணவா்களின் தனித்திறனை பாராட்டி அங்கீகரிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கா்நாடகம், மகாராஷ்டிரம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும், தமிழகத்தில் தனியாா் பள்ளிகளிலும் இருக்கும் ‘நோ பேக் டே’ என்ற திட்டம் தற்போது தமிழக அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.