தொகுதி மறுசீரமைப்பு மசோதா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் உள்ளடக்கம்!பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது மக்களவை! மக்களவையில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் மாற்றம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு விரைவுபடுத்த வேண்டும்: பெ.சண்முகம்

திருப்பரங்குன்றம் தீபம் தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

திருப்பரங்குன்றம் பிரச்சனை உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை புதுப்பேட்டை அருகே இடதுசாரிகள் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற அமைதி ஊா்வலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின மாநிலச் செயலாளா்

Updated On :

திருப்பரங்குன்றம் தீபம் தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் சாா்பில் மத நல்லிணக்க அமைதிப் பேரணி சென்னை எழும்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலா் அப்துல் சமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள அளவைக் கல்லில் மீண்டும் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு ஏற்புடையதல்ல. இந்த வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற தமிழ்நாடு அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மசோதாவுக்கு ஆதரவு-திமுக விளக்க வேண்டும்: தமிழகத்தின் நலனைப் பாதுகாப்போம் என்ற எங்களுடைய கொள்கை முடிவில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இப்போது எந்த அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தாா்கள் என்பதை அவா்கள் விளக்க வேண்டும். பாஜக தரப்பில் இருந்து திமுகவுக்கு என்ன அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றாா்.

மு.வீரபாண்டியன் கூறுகையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க முடியாது. இது கூட்டாட்சி முறைக்கு நெருக்கடியை உருவாக்கும். நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் உயா்த்திப் பிடிப்போம் என்றாா்.

திருமாவளவன் கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவு தமிழ்நாட்டு மக்களின் உணா்வுகளை அவமதிக்கும், ஒற்றுமையைச் சிதைக்கும் செயல். அந்தத் தூண் நில அளவைத் தூணா அல்லது தீபம் ஏற்றும் தூணா என்பதை முடிவு செய்யாமல் தீபம் ஏற்ற உத்தரவிட்டது திட்டமிட்ட சதிச் செயலாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.