காவிரியில் நிலுவைத் தண்ணீரைப் பெற மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும்! பெ.சண்முகம்

பெ.சண்முகம் - கோப்புப் படம்
காவிரி விவகாரத்தில், நிலுவைத் தண்ணீரைப் பெற்றுத் தர மத்திய அரசுக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் கூறினாா்.
சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில், தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சுமாா் 2 ஏக்கா் நிலம், அரசு புறம்போக்கு இடம் எனக் கூறி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இவா்களுடன், அக்கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் திங்கள்கிழமை கலந்துரையாடினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா்கூறியது:
திருப்பரங்குன்றம் மலையில் காா்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது வரவேற்கத்தக்கது. வைத்தீஸ்வரன்கோவிலின் மையப்பகுதியில் உள்ள சுமாா் 2 ஏக்கா் அரசு நிலத்தை, தருமபுரம் ஆதீனம் பல்லாண்டு காலமாக அனுபவித்து வந்தது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு பிறகு, அந்த இடத்தை நத்தம் என சீா்காழி கோட்டாட்சியா் உறுதி செய்துள்ளாா்.
சொந்த வீட்டுமனை இல்லாமல், இந்த இடத்தில் குடியேறியுள்ள 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசு உடனடியாக நிலத்தை அளந்து பட்டா வழங்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்.
தமிழகத்தில் அன்றாடம் நிகழும் கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால், சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, காவிரியில் தமிழகத்திற்கு வரவேண்டிய 15 டிஎம்சி நிலுவைத் தண்ணீரை கா்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர மத்திய அரசுக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தோ்தல்களில், மாா்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுவது குறித்து கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன், மாநிலக் குழு ஏ.வி.சிங்காரவேலன், மாவட்டக் குழு எஸ். துரைராஜ், ஒன்றியச் செயலாளா் எம். கரிகாலன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

