திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; தேவையற்ற கலவரத்திற்கு வழிவகுக்கக் கூடாது: அண்ணாமலை

திருப்பரங்குன்ற தீப விவகாரம் தொடர்பாக ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

'We The Leaders' movement founder K Annamalai

'வி தி லீடர்ஸ்' இயக்கத்தின் நிறுவனர் கே. அண்ணாமலை - எக்ஸ்

Updated On :

திருப்பரங்குன்ற தீப விவகாரம் தொடர்பாக ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று (நவ. 28) மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து மலையைச் சுற்றி சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, முன்னாள் பாஜக தலைவரும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “இதில் கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை. சுதந்திர இந்தியாவில் 1960-லிருந்து நடந்துவரும் பிரச்னை. இதில் தேவையில்லாமல் ஏதேனும் ஒரு அமைப்பு, ’நாங்கள் கொண்டாடுகிறோம். பட்டாசு வெடிக்கிறோம். நாங்கள் தமிழ்நாடு போலீஸுக்கு அல்வா கொடுக்கிறோம். சிஆர்பிஎப் வீரர்களுக்கு நாங்கள் மலர் தூவுகின்றோம்' என்று செய்யும்போது, அது தேவையின்றி இந்தச் சூழலை மேலும் மோசமாக்கும். ஒரு உண்மையான முருக பக்தர் எப்படி இருப்பாரென்றால், முருகரைப் பார்த்து சாமி கும்பிட்டு, தீபத்தை ஏற்றி விளக்கு வைத்து வழிபட்டுவிட்டு திரும்பி வந்துவிடுவார். அது ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் இதுதான் நாம் முருகனுக்கு செய்யும் தொண்டாக இருக்கும்.

அதனால் தமிழ்நாட்டில் தேவையில்லாத ஒரு கலவரத்திற்கு இது வழிவகுக்க கூடாது. சிஆர்பிஎப் வீரர்கள் இருக்கின்றனர். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதே நேரத்தில் நீதியரசர்கள் இருக்கின்றனர். நீதிமன்ற அவமதிப்பிற்காக 13 அதிகாரிகள் போகவேண்டும். எனக்கு இன்னும் ஆச்சரியமாக உள்ளது. எப்படி மதுரை ஆட்சியரை இன்னும் இடைநீக்கம் செய்யாமல் உள்ளனர் என்று. ஏனென்றால், உச்ச நீதிமன்றத்தின் கடுமையான சாடலைப் பார்க்கையில், கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு தலைகள் உருளப்போகிறது என்று நான் நினைத்தேன். அதனால், எனக்குத் தெரியவில்லை.

ஆனால் மதுரை ஆட்சியர் சொல்லலாம். அரசியல் கட்டாயத்தினால் தான் இந்த முடிவெடுத்தேன் என்று. ஆனால் உச்ச நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப்போகின்றனர் என்று எனக்குத் தெரியவில்லை.

அதனால் இது கொண்டாடப்பட வேண்டிய தீர்ப்பு அல்ல. வழிபாட்டு முறையை முருக பக்தர்களுக்கு கொடுத்திருக்கக்கூடிய ஒரு தீர்ப்பு.

அங்குள்ள தர்காவுக்கு இஸ்லாமியர்கள் செல்கின்றனர். இங்குள்ள தீபத் தூணில் ஹிந்து சொந்தங்கள் விளக்கு ஏற்றுகின்றனர். முருகபெருமானுடைய பக்தர்கள் இருக்கின்றனர். அதோடு, பிரச்னை முடிந்துவிட்டது.

இதை திரும்பத் திரும்ப பேசி இதை இழுத்துக் கொண்டு சென்றோம் என்றால், இது தேவையில்லாத விபரீதத்துக்கு தான் வழிவகுக்கும். அதுவே எங்களுடைய கருத்தும் கூட” என்று பேசியுள்ளார்.

Summary

Thiruparankundram Deepam issue; should not lead to unnecessary riots: Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.