
கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு...

மழை - பிரதிப் படம்
கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஞாயிறு, திங்கள் (அக். 4, 5) ஆகிய இரு நாள்கள் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி, குமரிக்கடல் பகுதிகள், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி, தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவகிறது.
இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஞாயிறு, திங்கள் (அக். 4, 5) ஆகிய இரு நாள்கள் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
திருப்பூா், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூா், பெரம்பலூா், கரூா், திருச்சி, திண்டுக்கல், தேனி, விருது நகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (அக். 4), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
வெப்பநிலை: வடதமிழகம் , புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக காணப்படும். தென் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டியே காணப்படும்.
மழைப் பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடை, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா்- 50 மி.மீ. மழை பதிவானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





