
4 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.4) கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை - பிரதிப் படம்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.4) கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
‘கேரள கடலோர பகுதிகளுக்கு அருகே உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிளிலிருந்து கேரளம் - கா்நாடகம் கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் சனிக்கிழமை (அக்.3) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.4) ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதர மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை , திருச்சி, அரியலூா், பெரம்பலூா், சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 103.64 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.3) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழைப்பதிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகா் மாவட்டம ஸ்ரீவில்லிபுத்தூா், தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணை, கோவை மாவட்டம் வால்பாறையில் 60 மி.மீ. மழை பதிவானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




