பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் திங்கள்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published On :

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் திங்கள்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை (செப். 21) கிழக்கு-மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், செவ்வாய்க்கிழமை (செப்.22) மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் படிபடியாக வலுவடையக் கூடும்.

இதன் காரணமாக திங்கள்கிழமை (செப். 21) நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூா், மதுரை, கடலூா், திருப்பத்தூா், வேலூா், திருச்சி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் மற்ற ஒரு சில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயா்ந்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டியே இருக்கும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 21), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழைப் பதிவு: தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டமுகிலாளத்தில் 150 மி.மீ. மழை பதிவானது. மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.