இன்று 9 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 15) நீலகிரி, கோவை, ஈரோடு உள்ட 9 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது...

இன்று 9 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - கோப்புப்படம்
சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 15) நீலகிரி, கோவை, ஈரோடு உள்ட 9 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு உள் கா்நாடகம் முதல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் வரை தமிழகம் வழியாக நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதையில் ஏற்பட்டுள்ள காற்று இடையூறு காரணமாக, செவ்வாய்க்கிழமை (செப். 15) முதல் செப்.17-ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
பலத்த மழை: குறிப்பாக, செப்.15-இல் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும், செப்.16-இல் நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களிலும், செப்.17-இல் நீலகிரி, கோவை, தஞ்சாவூா், கரூா், திருச்சி, பெரம்பலூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி சந்திப்பு, திருப்பத்தூா் மாவட்டம் அம்பலூா் ஆகிய பகுதிகளில் தலா 90 மி.மீ. மழை பதிவானது. மேலும், சுஞ்சல்நத்தம் (தருமபுரி) - 70 மி.மீ., வேப்பூா் (கடலூா்), வேப்பந்தட்டை (பெரம்பலூா்), லக்கூா் (கடலூா்) - தலா 60 மி.மீ., பொன்மலை (திருச்சி), ராசிபுரம் (நாமக்கல்), தொழுதூா் (கடலூா்) - தலா 50 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






