கோடம்பாக்கத்தில் பைக் சாகசம்! நேற்று விடியோ வைரலான நிலையில் இன்று கைது வைரல்!

கோடம்பாக்கத்தில் பைக் சாகசம் செய்த இளைஞர்களின் விடியோ நேற்று வைரலான நிலையில் இன்று கைது செய்யப்பட்டது பற்றி..

பைக் சாகசம்

பைக் சாகசம்

Published On :

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களது 67 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 16 பேர் மீது 3 வழக்குகள் பதிவு செய்து சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் அருகே மக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டி வீலிங் உள்ளிட்ட ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்ட 16 பேரை சென்னை பெருநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அக். 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 15 முதல் 20 பேர், இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு மற்றும் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, சாகசத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய 11 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

எண் பலகை இல்லாத 56 வாகனங்கள் பறிமுதல்!

மக்கள் கொடுத்த புகார் மற்றும் பைக் சாகச விடியோ வைரலான நிலையில், போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய தீவிர வாகனத் தணிக்கையின்போது, பதிவு எண் பலகைகள் இல்லாமல் இயக்கப்பட்ட 56 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 67 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கைது செய்யத் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடுமையான நடவடிக்கை – போலீஸ் எச்சரிக்கை

மக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கும் வகையிலும், சாகசம் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வீலிங் மற்றும் பிற சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுபோன்ற ஆபத்தான செயல்களைத் தடுக்க, நகரம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பு மற்றும் வாகனத் தணிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Summary

Bike stunt in Kodambakkam! After the video went viral yesterday, news of the arrest has gone viral today!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.