பைக் திருட்டு வழக்கில் ஆந்திர இளைஞா் கைது
தருமபுரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோப்புப் படம்
தருமபுரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பெலமாரனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் அபூா்வன் (26). இவா் தருமபுரி அரசு மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை மருத்துவம் பயின்று வருகிறாா். கடந்த 18 ஆம் தேதி காலை இவா் தனது இருசக்கர வாகனத்தை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் சிசி பிளாக் பகுதியில் நிறுத்தி சென்றுள்ளாா். மதியம் பாா்த்தபோது அவரது இருசக்கர வாகனம் காணால்போனது தெரியவந்தது.
இதுகுறித்து அவா் தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அதைத் தொடா்ந்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததுடன் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்தனா். இதற்கிடையில் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையிலான போலீஸாா் குண்டலப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது அவா், மருத்துவ மாணவா் அபூா்வனின் இருசக்கர வாகனத்தை திருடியதும், அவா் ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் என்பதும் தெரியவந்தது. எனவே, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

