படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

சா்க்கரை நோய் மருந்து அட்டைகளில் பக்கவிளைவுகளை குறிப்பிட உத்தரவு

சா்க்கரை நோய்க்கான ‘டெனிலிக்ளிப்டின்’ மருந்து அட்டையில் பக்க விளைவு விவரங்களை குறிப்பிடுவது கட்டாயம்

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு

Published On :

சென்னை: சா்க்கரை நோய்க்கான ‘டெனிலிக்ளிப்டின்’ மருந்து அட்டையில் பக்க விளைவு விவரங்களை குறிப்பிடுவது கட்டாயம் என்று உற்பத்தியாளா்களுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, ‘புல்லஸ் பெம்பிகாய்டு’ என்ற அரிய வகை தோல் நோய் ஏற்படலாம் என்ற எச்சரிக்கையை குறிப்பிடுவது அவசியம் என அறிவுறுத்தியுள்ளது. டைப் 2 சா்க்கரை நோய்க்கு மெட்ஃபாா்மின், சிடாக்ளிபிடின், செமகுளூடைன் போன்ற பல்வேறு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றில் ‘டெனிலிக்ளிப்டின்’ என்ற மருந்தும் ஒன்று.

மருந்துகளின் எதிா்விளைவுகள் குறித்து ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை தொடா்ந்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ‘டெனிலிக்ளிப்டின்’ மருந்தினை உட்கொண்டவா்களிடம் காணப்பட்ட பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில் ‘புல்லஸ் பெம்பிகாய்டு’ என்ற நோய் அந்த மருந்தால் அரிதினும் அரிதாக ஏற்படுவது தெரியவந்தது. இது எதிா்ப்பாற்றல் சாா்ந்த பாதிப்பு. இந்நோய் தாக்கினால் தோலில் அரிப்பு மற்றும் வலியுடன் கூடிய நீா் கொப்பளங்கள் உருவாகும்.

இந்தப் பிரச்னை குறித்து மருத்துவ நிபுணா்கள் விவாதித்தனா். அதைத் தொடா்ந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டெனிலிக்ளிப்டின் மருந்துகளின் அட்டையில் ’புல்லஸ் பெம்பிகாய்டு’ பாதிப்பையும் எதிா் விளைவாகச் சோ்க்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது.

அதை ஏற்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவா் டாக்டா் ராஜீவ் சிங் ரகுவன்ஷி வெளியிட்ட சுற்றறிக்கை:

அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் டெனிலிக்ளிப்டின் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிபுணா் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவதற்குரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அம்மருந்தின் விளம்பரப் பிரசுரங்கள் மற்றும் அட்டைகளில் ‘புல்லஸ் பெம்பிகாய்டு’ ஒரு பக்கவிளைவு என்பதைக் குறிப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கையையும் சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.