
குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு
குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை (அக். 6) வெளியாவது குறித்து...

டிஎன்பிஎஸ்சி தேர்வு - பிரதிப் படம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (அக். 6) வெளியாகிறது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு செய்து வருகிறது.
2026 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, 6 தேர்வுகளில் 5 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அவற்றில் குரூப் 1, 2, 2ஏ ஆகிய 3 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி அக். 6 ஆம் தேதியில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டு, டிச. 20 ஆம் தேதியில் தேர்வு நடைபெறும்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் 4,662 காலியிடங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், நடப்பாண்ட்ல் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தாண்டில் குரூப் 4 தேர்வுக்கு சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
The notification for the Group 4 exam will be released tomorrow
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







