வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

பொதுவாழ்வில் 25 ஆண்டுகள்... பிரதமர் மோடிக்கு கமல் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து...

நரேந்திர மோடி / கமல்ஹாசன் - கோப்புப் படம்

Published On :

பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது:

''பொதுவாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவாழ்வில் 25 ஆண்டுகள் என்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பறைசாற்றும் ஒரு சான்றாகும். பொதுவாழ்வில் எனது 70 ஆண்டுகாலப் பயணமும் மக்களின் நம்பிக்கையாலும் அன்பாலுமே நிலைத்திருக்கிறது.

கடந்த ஆண்டு, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு அவரைச் சந்தித்தபோது, ​​முதல்முறை நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு அவர் தாராளமாக நேரம் ஒதுக்கித் தந்தார்.

எங்கள் அரசியல் சார்புகள் எதுவாக இருந்தாலும், இந்தியாவின் மீதான எங்கள் நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் குறித்தும், வலிமையான தேசத்தையும் வருங்கால சந்ததியினருக்கான சிறந்த எதிர்காலத்தையும் கட்டமைப்பதில் எங்களுக்குள்ள கூட்டுப் பொறுப்பு குறித்தும் நாங்கள் உரையாடினோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

25 years in public life... Kamal Haasan congratulates Prime Minister Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER