எம்பிக்கள் மீது தில்லி போலீஸார் தாக்குதல்? - சாலையில் படுத்து பிரியங்கா காந்தி தர்னா!

தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான இந்தியா கூட்டணி எம்பிக்களின் போராட்டத்தில்...

INDIA Bloc MPs en route to Jantar Mantar protest against CEC

பிரியங்கா காந்தி தர்னா.. - ANI

Published On :

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராடிய இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக, பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு.

தில்லியில், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி இந்தியா கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (அக்.7) போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, ஜந்தர் மந்தர் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களை தில்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது தில்லி காவல் துறையினர் தாக்குதல் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து, பிரியங்கா காந்தி செய்தியாளர்களுடன் பேசுகையில்,

“தேர்தல் ஆணையரைச் சந்திக்கக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் (மத்திய அரசு) இப்படிதான் நடத்துகிறார்கள். அவர்கள் எம்பிக்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.

காவல்துறையினர் என் உடல் முழுவதும் கீறியுள்ளனர். எங்களைக் கீழே தள்ளிவிட்டனர். இனி நாங்கள் இங்கிருந்து நகரப்போவதில்லை. அவர்கள் தங்களின் படைகளைத் திரும்பப் பெறட்டும். நான் இங்கிருந்து நகர மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை தில்லி காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கி வாகனத்தில் ஏற்றி அப்பகுதியில் இருந்து வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

Summary

Priyanka Gandhi has alleged that the police are assaulting INDIA bloc MPs who were protesting against CEC Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER