தில்லியில் இடிந்து விழுந்த 4 மாடிக் கட்டடம்! பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்!

தில்லியில் திடீரென 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து...

Four-storey building collapses in Delhi's Seemapuri

தில்லியின் சீமாபுரி பகுதியில் திடீரென இடிந்து விழுந்த 4 மாடிக் கட்டடம்... - ANI

Published On :

தில்லியில், சீமாபுரி பகுதியில் அமைந்திருந்த 4 அடுக்குமாடிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

வடகிழக்கு தில்லியின் சீமாபுரி பகுதியில் அமைந்திருந்த 4 அடுக்குகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று புதன்கிழமை (அக். 7) மாலை 3 மணியளவில் திடீரென இடிந்து விழுந்ததாக, தில்லி தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்தக் கட்டட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுவதால், உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கியிருந்த சிலரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி, தில்லி காவல்துறை துணை ஆணையர் (ஷஹ்தாரா) ராஜேந்திர பிரசாத் மீனா கூறுகையில்,

“இடிந்து விழுந்தது 225 சதுர அடி பரப்பளவிலான 4 மாடிக் கட்டடம். சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், 2 அல்லது 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கின்றோம். மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கான காரணம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு உத்தரகண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் அந்தக் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

A four-story building in the Seemapuri area of ​​Delhi has suddenly collapsed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.