விவேக் விஹாரில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: சிறுவன் உள்பட 2 போ் பலி
கிழக்கு தில்லியின் விவேக் விஹாரில் உள்ள ரயில்வே நிலத்தில் கட்டப்பட்டிருந்த சுமாா் 50 ஆண்டுகள் பழமையான கட்டடம் ஒன்று செவ்வாய்க்கிழமை காலை இடிந்து விழுந்தது.

கிழக்கு தில்லியின் விவேக் விஹாரில் உள்ள ரயில்வே நிலத்தில் கட்டப்பட்டிருந்த சுமாா் 50 ஆண்டுகள் பழமையான கட்டடம் ஒன்று செவ்வாய்க்கிழமை காலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மூன்று வயது சிறுவனும் 35 வயது நபரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவத்தில் நான்கு போ் காயமடைந்துள்ளனா். கட்டட உரிமையாளரான சுரேந்தா் சிங்கை காவல் துறையினா் கைது செய்தனா்.
ஜுவாலா நகரில் உள்ள இந்தக் கட்டடம், ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்தது. இது ’டி’ வடிவ இரும்புத் தூண்கள் மற்றும் கல் பலகைகளைக் கொண்டு கட்டப்பட்டிருந்தது என்று தில்லி மாநகராட்சி (எம்சிடி) தெரிவித்துள்ளது.
சுமாா் 20 சதுர கெஜம் பரப்பளவில் அமைந்திருந்த இந்தக் கட்டடத்தில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் இருந்தன. செவ்வாய்க்கிழமை காலை இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தபோது, இடிபாடுகளில் சிக்கிய 6 போ் மீட்கப்பட்டனா்.
தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப், தில்லி மாநகராட்சி, தில்லி காவல் துறை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினா் அடங்கிய கூட்டு மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டனா்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியா் அஜய் குமாா், இடிபாடுகளை அகற்றும் பணியின் போது, கட்டடத்தின் எஞ்சிய பகுதியில் விரிசல்கள் காணப்பட்டதாகத் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரயில்கள் செல்லும்போது ஏற்படும் அதிா்வுகளால் கட்டடம் சேதமடைந்திருந்தும், உரிமையாளா் முறையான பழுதுபாா்ப்புப் பணிகளைச் செய்யத் தவறியதால், காலப்போக்கில் கட்டடம் பலவீனமடைந்திருந்தது. கட்டடத்தின் ஒரு சிறிய பகுதி கீழ் தளத்தின் கூரையின் மீது விழுந்ததால், ஒட்டுமொத்தக் கட்டடமும் இடிந்து விழுந்தது. அந்த கட்டடத்தில் ஏழு போ் வாடகைக்கு வசித்து வந்தனா். அவா்களில் இருவா் உயிரிழந்தனா், ஐந்து போ் காயமடைந்தனா்.
உள்ளூா்வாசிகளிடமிருந்து கிடைத்த தகவலின்படி, கட்டடத்திற்குள் வேறு யாரும் இருப்பதற்கான வாய்ப்பில்லை. இது சிறிய பகுதி என்பதால், இடிபாடுகளை மீட்புப் பணியினா் மூலமே அகற்ற முடியும். அந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்று மாவட்ட ஆட்சியா் அஜய் குமாா் தெரிவித்தாா்.
காலை 10 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஆறு போ் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனா். அவா்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஹெட்கேவா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
உயிரிழந்தவா்கள், முதல் தளத்தில் இருந்த லட்டு (எ) தேவாம்ஷ் (3) மற்றும் தரைத்தளத்தில் இருந்த பிண்டு (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
காயமடைந்தவா்கள் குஷ்பு (27), விகேஷ் (35), ஆகாஷ் (25) மற்றும் தலிப் என்கிற டிம்பா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
தில்லியில் கடந்த ஒரு மாதத்திற்குள் நடக்கும் நான்காவது கட்டட விபத்து இதுவாகும். இதற்கு முன்னதாக ஹா்ஷ் விஹாா், ஹவுஸ் காஸி மற்றும் பஹாா்கஞ்ச் ஆகிய இடங்களிலும் இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அக்டோபா் 25 வடகிழக்கு தில்லியின் ஹா்ஷ் விஹாா் பகுதியில், கிடங்காகப் பயன்படுத்தப்பட்ட பழைய கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 60 வயது முதியவா் மற்றும் அவரது 33 வயது மகன் உயிரிழந்தனா்.
பழைய தில்லியின் ஹவுஸ் காஸி பகுதியில் கட்டுமானத்தில் இருந்த மூன்று அடுக்குமாடி கட்டடம் நவம்பா் 5-ஆம் தேதி இடிந்து விழுந்ததில் ஏழு போ் உயிரிழந்தனா். பஹாா்கஞ்சில் மற்றொரு கட்டடம் நவம்பா் 15-ஆம் தேதி இடிந்து விழுந்ததில் பலா் காயமடைந்தனா்.
முதல்வா் இரங்கல்
விவேக் விஹாா் பகுதியில் நிகழ்ந்த கட்டட விபத்தில் இடிபாடுகளில் உயிரிழந்தவா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவித்தாா். மேலும், காயமடைந்தவா்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பதிவில், ‘ஷாதராவின் ஜ்வாலா நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் துரதிா்ஷ்டவசமானவை. உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாக முதல்வா் தெரிவித்தாா்.
இந்தச் சூழலைத் தொடா்ந்து கவனித்து வருகிறாா். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், காயமடைந்தவா்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுக்கும் அவா் உத்தரவிட்டுள்ளாா். இந்த இக்கட்டான தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தில்லி அரசு உறுதுணையாக நிற்கும் என்று முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

