
மதுரை கள்ளழகர் கோயில் நுழைவு வாயிலில் ‘ஹிந்தி’.. தமிழ் மொழி நீக்கமா? உண்மை என்ன?
மதுரை கள்ளழகர் கோயில் நுழைவு வாயிலில் ‘ஹிந்தி’.. தமிழ் மொழி நீக்கமா? என்பதைப் பற்றி...

மதுரை கள்ளழகர் கோயில்.
மதுரை கள்ளழகர் கோயில் நுழைவு வாயிலில் ‘ஹிந்தி’க்காக தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்த கோயில் பெயர் நீக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற மதுரை கள்ளழகர் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்து தரிசித்துவிட்டுச் செல்வது வழக்கம். இந்தக் கோயிலின் நுழைவு வாயில் பகுதியில் மிகப் பிரமாண்டமான தோரண வாயில் உள்ளது. இந்த நுழைவு வாயிலில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளிலும் ‘அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயில்’ என்று பெயிண்டில் எழுதப்பட்டிருந்தது. தற்போது அந்த பெயிண்டில் இருந்த எழுத்துகளை நீக்கிவிட்டு ஜொலிக்கும் வடிவிலான எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை இரவு மதுரை கள்ளழகர் கோயில் நுழைவு வாயிலில், தமிழ்- ஆங்கிலம்- ஹிந்தியில் கோயிலின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால், தற்போது தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்த கோயிலின் பெயர் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தை உண்மைத்தன்மையை சரிபார்க்காமலும் எதிர்வினைகள் கிளம்பின.
இந்த நிலையில், இந்தத் தகவலை தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், மதுரை அழகர் கோயில் நுழைவு வாயிலில் தமிழ் நீக்கம் என்பது பொய் தகவல். வதந்திகளை பரப்பாதீர்கள் என்றும் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக செய்தி சேனல் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலியான செய்தி.
செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தில், பெயர்ப்பலகையில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகளை திட்டமிட்டு ஃபோட்டோஷாப் மூலம் மறைத்து, தமிழ் நீக்கப்பட்டதைப் போன்ற ஒரு போலியான புகைப்படத்தை உருவாக்கி, அதனை உண்மையான புகைப்படம் போல சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், கடந்தாண்டுகளில் எப்படி பெயர் பலகை இருந்ததோ இப்போதும் அதே முறையில்தான் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறேன்.
இந்த செய்தி வடிகட்டிய பொய் மற்றும் முழுமையாக உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். செய்தி ஊடகம் என்ற பொறுப்பான தளத்தை பயன்படுத்தி திட்டமிட்டு உண்மையை மாற்றி சித்தரித்து செய்தி வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அரசாங்கத்தின் மீதும் இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.
பொய்யான புகைப்படத்தை உருவாக்கி, அதனை அடிப்படையாகக் கொண்டு போலியான செய்தியை பரப்பிய இந்தச் செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதà¯à®°à¯ à®à®´à®à®°à¯ à®à¯à®¯à®¿à®²à¯ நà¯à®´à¯à®µà¯ வாயிலில௠தமிழ௠நà¯à®à¯à®à®®à¯ à®à®©à¯à®ªà®¤à¯ பà¯à®¯à¯ தà®à®µà®²à¯#IID #TNIID@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan pic.twitter.com/kC8xPIoy0n
— TN IID (@tn_factcheck) October 6, 2026
இதுபோன்ற பொய்யான மற்றும் தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களின் மீது, சட்டத்திற்குள்பட்டு உரிய நடவடிக்கை நிச்சயமாக மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் இதுபோன்ற போலி செய்திகளையும், உண்மையை திரித்து வெளியிடும் செய்தி நிறுவனங்களையும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் (எண் 93) அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் இந்தியிலும் எழுதப்பட்டிருந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தச் சூழலில் இதுபோன்ற தவறான தகவல்கள் பரபரப்பட்டிருப்பது மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
Summary
Reports that the temple's name—written in Tamil—was removed from the entrance of the Madurai Kallazhagar Temple to make way for 'Hindi' have sparked a controversy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






