ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

தமிழ்நாடு அமைச்சரவையில் பெண் அமைச்சர் நீக்கமா?

தமிழக அமைச்சரவை அடுத்த வாரம் மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பதைப் பற்றி...

முதல்வர் விஜய், அமைச்சர்கள் கீர்த்தனா, கமலி, ஜெகதீஸ்வரி, விஜயலட்சுமி.

Published On :

தமிழக அமைச்சரவை அடுத்த வாரம் மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்நாட்டில் நிகழாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கட்சி ஆரம்பித்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்ற விஜய், முதல்வராக கடந்த மே 10 ஆம் தேதி பொறுப்பேற்றார்.

ஆதரவளித்த காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சர்கள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், இடதுசாரிகள் அமைச்சரவையில் இடத்தை மறுத்துவிட்டு வெளியிலிருந்து ஆதரவு மட்டும் கொடுப்பதாகத் தெரிவித்தன.

தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்ற போது ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கீர்த்தனா (ஒரு பெண் அமைச்சர்) உள்பட 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

அதன்பின்னர், மே 21 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் 7 பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கீர்த்தனா (தொழில்துறை), எஸ். கமலி (கால்நடைத்துறை), சி. விஜயலட்சுமி (பால்வளத்துறை), கே. ஜெகதீஸ்வரி (சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை) உள்ளிட்ட நான்கு பெண் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்பட்டது.

முதல்வராக விஜய் பதவியேற்று 150 நாள்கள் கடந்துள்ள நிலையில், அவர் பிரிட்டன் சென்று வந்த பின் அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் குறித்த அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் ஒரு பெண் அமைச்சர் உள்பட மூன்று பேர் நீக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில், தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய, முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இதை, துறை செயலர்கள் வாயிலாக முதல்வர் விஜய் தெரிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அமைச்சரின் செயல்பாடுகளில் முதல்வர் விஜய்க்கு திருப்தியில்லை என்றும் கூறப்படுகிறது.

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் அக். 9 ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன. மேலும், அதைத்தொடர்ந்து வடபழனி மெட்ரோ திறப்பு விழாவிற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகையைத் தொடர்ந்து அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட இடைத்தேர்தல்களுக்குப் பிறகு, தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் மற்றும் புதிய கூட்டணி அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

There are reports that the Tamil Nadu Cabinet will be reshuffled next week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER