அமைச்சரவையில் மாற்றமா? அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வரும் 15 பேர்? செங்கோட்டையன் பதில்!
தமிழக அமைச்சரவையில் மாற்றம் என வெளியான தகவல் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதில்...

முதல்வர் விஜய்யுடன் செங்கோட்டையன் - கோப்புப் படம்
தமிழக அமைச்சரவையில் தற்போதைக்கு மாற்றமில்லை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்துள்ளது. மேலும் சமீபத்திய இடைதேர்தலில் இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்ற நிலையில் அமைச்சரவை மாற்றம் நிகழும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
"தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்து இதுவரையிலும் அதுபற்றிய கருத்துகள் வெளிப்படுத்தவில்லை" என்றார்.
மேலும், "அரிசி உற்பத்தி குறைவாக இருக்கும்போது இதுமாதிரியான தட்டுபாடு ஏற்படுகிறது. பல்வேறு இடங்களில் குறைவான விலையில் மக்களுக்கு அரிசி வழங்குவதற்கு 2000 -க்கும் மேற்பட்ட அங்காடிகளைத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் விலைவாசி குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இன்னும் கூடுதலாக அண்டை மாநிலத்தில் இருந்து அரிசி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை குறித்து அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது. 3 மாத காலமாக பணிகள் நடைபெற்றுகின்றன. மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.
அதிமுகவில் இருந்து 15 பேர் வருவார்கள் என்றுதான் சொன்னேன். 15 எம்எல்ஏக்கள் வருவார்கள் என்று சொல்லவில்லை. இதற்கு முன்னாலும் ஒரு இயக்கத்தில் இருந்து மற்றொரு இயக்கத்திற்கு மாறி வந்திருக்கிறார்கள். அதனால் இது குதிரை பேரத்திற்கு வழிவகுக்காது" என்று பேசினார்.
Summary
TN minister sengottaiyan reply for TN cabinet change
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


