‘அதிமுகவிலிருந்து மேலும் 15 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு வரப் போகிறார்கள்’ - அமைச்சர் செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து மேலும் 15 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு வரவிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதைப் பற்றி...

அமைச்சர் செங்கோட்டையன்.
அதிமுகவில் இருந்து மேலும் 15 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு வரவிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வும் வருவாய்த்துறை அமைச்சருமான செங்கோட்டையன் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “யானை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுபோல.. அதிமுகவில் இருந்து 15 பேர் சீக்கிரமே வெளியே வர போகிறார்கள்.. இதெல்லாம் அவருக்கு (எடப்பாடி பழனிசாமி) தெரிகிறதா? என்பதைப் பற்றி தெரியவில்லை.
நல்லவேளை பழனிசாமி என்னை நீக்கினார், அங்கு இருந்து வந்ததால் மக்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தேர்தலில் நான் வருவேன், நீ வருவாய் என்று பேசியவர்கள் இரண்டாம், மூன்றாம் இடத்துக்கு சென்றுவிட்டனர்.
நேற்றுகூட பேசினார்கள். எடப்பாடி பழனிசாமி என்னைக் கட்சியைவிட்டு நீக்கினார். தப்பித்துவந்து இங்கு நான் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கிறேன்.
பேச்சுவார்த்தை நடக்கிறது; என்ன நடக்குமென்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் அதைச் செய்வோம், இதைச் செய்வோம். ஆட்சி இருக்காது என்று.. என்னய்யா ஆட்சி இருக்காது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் முதல்வர் விஜய்யை போல் ஒருவரை நான் பார்க்கவில்லை” என்றார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதனைத்தொடர்ந்து, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில், அந்தக் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தனியாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்கட்சியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 15 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வுக்கு வருவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Summary
Minister Sengottaiyan has stated that another 15 MLAs from the AIADMK are set to join TVK.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

