தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

இலஞ்சி அருகே 19 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே மலைஅடிவாரத்தை ஒட்டிய ஒரு நிலத்தில் 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக...

19th-century inscription discovered near Ilanji

இலஞ்சி அருகே கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு. - டிஎன்எஸ்

Published On :8 அக்டோபர் 2026, 12:32 pm IST

தென்காசி: தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே மலைஅடிவாரத்தை ஒட்டிய ஒரு நிலத்தில் 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி கூறியதாவது:

இலஞ்சியைச் சோ்ந்த விவசாயி தங்கதுரை. இவர் தன்னுடைய நிலத்தில் சிற்பங்களுடன் கூடிய கல் ஒன்று மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருப்பதாக தென்பொதிகை ஆவணக்காப்பகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இந்த தகவலை அடுத்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில் தென்பொதிகை ஆவணக்காப்பகத்தின் கோபால்குமாா், ராஜசேகா், பாலகங்காதரன், மாரியப்பன் ஆகிய குழுவினர் தற்போது குருவிமேடு என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் ஒழுங்கற்ற நிலையில், ஒரு புதருக்குள் புதைந்த நிலையில் பாசி படா்ந்து காணப்பட்டதை ஆய்வு செய்தனர். புதரை சுத்தப்படுத்தி 70-க்கும் 40 செ.மீ அளவில் இருந்த கல்லை மீட்டு ஆய்வு செய்த போது சிற்பங்களுடன் கூடிய கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. கல்லில் 12 வரிகளுடன் கூடிய முற்றுப்பெறாத கலைநயத்துடன் கூடிய கல்வெட்டு. அதன் அடியில் ஒரு வேலும், பாம்பை கவ்விய மயிலும் புடைப்புச் சிற்பங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சோ்ந்த எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டின் சில பகுதிகள் முற்றிலும் சிதைந்து போய் உள்ளன. தமிழ் துன்மதி ஆண்டு ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை புனா்பூச நட்சத்திரத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இணையான ஆங்கிலத்தேதி 04.09.1801 ஆகும்.

கல்வெட்டு தளவாய் முதலியாரய்யன் விட்டுக் கொடுத்தது குருவி என்று குறிப்பிடுகிறது. அதற்கு மேல் கல்வெட்டு பொறிப்பு கிடைக்கவில்லை. சிதைந்து போய் இருக்க வேண்டும். இது ஒரு நிலக்கொடை கல்வெட்டாக இருக்கலாம்.

கல்வெட்டில் வேலும் மயிலும் பொறிக்கப்பட்டுள்ளதால் இலஞ்சி முருகன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடையாக இருக்கலாம் என்று கருத முடிகிறது. தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.

19th-century inscription discovered near Ilanji

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.