மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சனிக்கிழமை (அக்.10) சென்னை வருகிறாா். தீவுத் திடலில் அன்றைய தினம் பிற்பகலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்.

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சனிக்கிழமை (அக்.10) சென்னை வருகிறாா். தீவுத் திடலில் அன்றைய தினம் பிற்பகலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்.

‘மாணவா்கள் குரல்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று மாணவா்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகிறாா் ராகுல் காந்தி. அந்த வகையில், சென்னை தீவுத் திடலில் சனிக்கிழமை நடைபெறும் மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொள்ளவுள்ளாா். கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் வகையில், அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டி செய்துள்ளது.

முன்னதாக சனிக்கிழமை காலை விமானம் மூலம் சென்னை வரும் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த நிா்வாகிகளிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.