திருப்பரங்குன்றம்: உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி!நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரைதொகுதி மறுசீரமைப்பு மசோதா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் உள்ளடக்கம்!பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது மக்களவை! மக்களவையில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் மாற்றம்!

ராகுல் காந்தியும் சென்னை வருகிறார்: அமைச்சர் விஸ்வநாதன்!

தொகுதி மறுசீரமைப்பு மசோதா: மு.க. ஸ்டாலினை சந்திக்கும் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி - படம்: கோப்பிலிருந்து...

Updated On :

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு, ஆதரவளிக்கவுள்ளதாக திமுக நேற்று அறிவித்திருந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்துப் பேசவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதற்காக, தனி விமானம் மூலம் இன்று (நவ. 29) சென்னை வரும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்கவுள்ளனர்.

இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் கூறுகையில், “காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் சென்னை வரவுள்ளதாக தில்லியில் இருந்து செய்தி வந்திருக்கிறது.

அவர்களின் பயணத்திட்டம் குறித்த முழுவிவரம் தெரியவந்தப் பிறகு, நண்பகல் 12.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, தெரிவிக்கிறேன்” என்றார்.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வுக்காக மக்களவை நாளை (நவ. 30) கூடவுள்ள நிலையில், தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வகை செய்யும் மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்காக, மக்களவையில் நவ. 30, டிச. 1, மாநிலங்களவையில் டிச. 2, 3 என நான்கு நாள்கள் அலுவல்கள் நடைபெறவுள்ளன.

அரசமைப்புச் சட்டத்தின் 132-ஆவது திருத்த மசோதா எனும் தற்போதைய மசோதாவின்படி, 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை (மாநிலங்களில் 815, யூனியன் பிரதேசங்களில் 35) அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

முந்தைய மசோதாவைப் போல் அல்லாமல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஒரே சீராக 50 சதவீத தொகுதிகளை அதிகரிக்கவும், இந்த எண்ணிக்கை மற்றும் எல்லை மறுவரையறையை 2051 வரை மாற்றமின்றி தொடரவும் முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளன.

Summary

Higher Education Minister K. Ponmudy (P. Viswanathan) has stated that Congress leaders Sonia Gandhi, Mallikarjun Kharge, and Rahul Gandhi are set to meet with DMK leader M.K. Stalin, following the DMK's announcement yesterday that it would support the Women's Reservation Bill, linked to the delimitation of constituencies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.