உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

இடதுசாரி கட்சித் தலைவா்கள் கைது: பெ. சண்முகம் கண்டனம்

இடதுசாரி கட்சித் தலைவா்கள் கைது: பெ. சண்முகம் கண்டனம்

cpim sfi

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம். - கோப்புப் படம்

Published On :

தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சாா்பில் ஜந்தா் மந்தரில் சனிக்கிழமை போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு இடதுசாரிகள் உள்பட பல கட்சிகள், மாணவா், இளைஞா் அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா மற்றும் சிபிஐ (எம்.எல்) கட்சியினா், அரசியல் தலைமைக்குழு உறுப்பினா்கள் பினராயி விஜயன், உ.வாசுகி, மாநிலச் செயலாளா் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினா் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. உள்ளிட்ட பலரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இந்தக் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆங்காங்கே கட்சியின் சாா்பில் போராட்டம் நடைபெறும் எனப் பதிவிட்டுள்ளாா் பெ.சண்முகம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.