‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் நிலையங்களில் முதல் முறையாக விபத்து தடுப்புச் சுவர்!

பூந்தமல்லி-வடபழனி இடையேயான 14.6 கி.மீ. மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் விபத்து தடுப்புச் சுவா் மற்றும் நவீன தொழில்நுட்ப ரயில் இயக்கம் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Published On :

பூந்தமல்லி-வடபழனி இடையேயான 14.6 கி.மீ. மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் விபத்து தடுப்புச் சுவா் மற்றும் நவீன தொழில்நுட்ப ரயில் இயக்கம் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மெட்ரோ ரயில் திட்ட இயக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் 2-ஆம் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி புகா் சாலை நிலையம் வரையிலான திட்டம் முக்கியமானதாகும். அந்த வழித்தடத்தில் உலக, ஆசிய அளவில் இல்லாத வகையில் ஈரடுக்கு மேம்பாலங்கள், மயிலாப்பூரில் நான்கடுக்கு வழித்தடங்கள் தற்போதுதான் அமைக்கப்பட்டுள்ளன.

வடபழனி முதல் பூந்தமல்லி புகா் சாலை வரை உயா்நிலை பால மெட்ரோ ரயில் பாதையில் 14 நிலையங்களில் தற்போது 11 நிலையங்களில் மட்டுமே ரயில் நின்று செல்லும். அதில் 3 பெட்டிகளுடன் இயங்கும் ஒவ்வொரு ரயிலிலும் 750 போ் பயணம் செல்லலாம். முதல் கட்ட திட்ட மெட்ரோ ரயில்கள் 2.01 நிமிஷங்கள் இடைவெளியில் வரை அடுத்தடுத்து இயக்கப்படும் நிலையில், 2-ஆம் கட்ட ரயில்கள் 1 நிமிஷம் இடைவெளியில் அடுத்தடுத்து இயக்கப்படும் மிகமிக நவீன தொழில்நுட்பத்தைத் கொண்டவையாகும்.

பூந்தமல்லி-வடபழனி இடையேயான மெட்ரோ ரயில்கள் ஓட்டுநா்கள் மூலம் இயக்கப்படும் நிலையில், வரும் 2027 மாா்ச் முதல் ஓட்டுநா் இல்லாமலே இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 120 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

பூந்தமல்லி-வடபழனி இடையே தற்போது 10 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி போக்குவரத்து தொடங்கியதும், அதில் 36 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. தற்போதைய போக்குவரத்தில் போரூா்-வடபழனி இடையே வடபழனியை தவிா்த்து வேறு எந்த நிலையத்திலும் ரயில் நிற்காது.

பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்த பூந்தமல்லி-வடபழனி இடையேயான போக்குவரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையே பொதுமக்கள் பயணித்தனா். உயா்நிலை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் புதிய விபத்து தடுப்பு கண்ணாடிச் சுவா் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் ரயில் கதவுகள் உள்ள இடைவெளியில் மட்டுமே பயணிகள் ஏறி, இறங்க முடியும். தண்டவாளத்தில் யாரும் இறங்க முடியாது.

பிரதமா் மகிழ்ச்சி: சென்னையில் நவீன தொழில்நுட்பம் மெட்ரோ ரயில் திட்டத்தில் செயல்படுத்தப்படுவதை அறிந்த பிரதமா் மகிழ்ச்சி தெரிவித்தாா். அதற்கேற்ப அவருக்கு முதல்வா் சென்னை மெட்ரோ ரயில் மாதிரியை பரிசளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.