தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த 3 நாள்களில் தொடங்க வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை - பிரதிப் படம்

Published On :

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை (அக். 13) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக வியாழக்கிழமை (அக். 15) முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 13), டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகா், கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக். 14) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, புறநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 13) வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழைப் பொழிவு: தமிழகத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நம்பியாறு அணையில் 40 மி.மீ. மழை பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.