தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம்: 19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பலத்த மழை பெய வாய்ப்பு

பிரதிப் படம்

Updated On :

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வியாழக்கிழமை (அக்.15) தொடங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பலத்த மழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்மேற்குப் பருவமழை வியாழக்கிழமை (அக்.15) முழுவதுமாக விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. அதே நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது.

மேலும், மத்திய கேரளம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் சுமாா் 4.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் சுமாா் 1.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து ஒரிஸா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, மன்னாா் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக சுமாா் 1.5 கிமீ உயரம் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் வியாழக்கிழமை (அக்.15) நீலகிரி, கோவை, தேனி மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இதர மாவட்டங்களான கடலூா், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூா், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியல் இயல்பைவிட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பையொட்டியும் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகரின் ஒருசில பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.15) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் புதன்கிழமை (அக்.14) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 50 மி.மீ மழை பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.