தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

ஆர்.வி. அர்லேகர் - கோப்புப் படம்
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (அக். 12) உத்தரவிட்டுள்ளார்.
கேரளத்தின் முழு நேர ஆளுநராகவும், (மார்ச் மாதத்தில் இருந்து) தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்து வந்த நிலையில், தமிழகத்தின் முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிக்கிம் மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் மதூர், கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று, பிரஜ் மோகன் ராம் ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிளம் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தவர்.
டாக்டர் சுதா யாதவ் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மகேந்திரகார் தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் மக்களவை உறுப்பினராவார். இதன்மூலம் வி.எம். ரமாதேவிக்கு பிரகு கர்நாடகத்தில் நியமிக்கப்பட்ட 2 வது பெண் ஆளுநர் இவராவார்.
உத்தரகண்ட் ஆளுநராக தால் சிங் பெசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்தியப் பிரதேசத்தின் பகல்காட் தொகுதி மக்களவை முன்னாள் உறுப்பினராவார்.
சிக்கிம் ஆளுநராக துஷ்யந்த் கெளதம் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்த இவர் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினராக இருந்தவர்.
Summary
R.V. Arlekar appointed as the full-time Governor of Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


