ஜெயிலர் 2 வெளியீட்டுக்கு முன்பே மதுரையில் ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து உற்சாகம்!
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 வெளியீட்டுக்கு முன்பே மதுரையில் களைக்கட்டிய கொண்டாட்டம் பற்றி..

ஜெயிலர் 2 - video crop
ஜெயிலர் 2 திரைப்படம் நாளை வெளியாவதை முன்னிட்டு சோலைமலை திரையரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் 20-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நாளை வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், மதுரையில் ரஜினி ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இப்படம், பல்வேறு நகரங்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ரஜினிகாந்த், மிதுன் சக்ரவர்த்தி, மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படும் இப்படம், சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மதுரை அரசரடி பகுதியில் அமைந்துள்ள சோலைமலை திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனர்களை அமைத்து, திரைப்பட வெளியீட்டைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ரஜினிகாந்தின் உருவப்படத்திற்குப் பாலாபிஷேகம் செய்து தங்களது கொண்டாட்டத்தைத் தொடங்கினர். மேலும், நாளை திரைப்படம் வெளியாக உள்ளதை முன்னிட்டு மதுரை முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற துணைச் செயலாளர் அழகர் கூறுகையில்,
மதுரையில் சுமார் 20 திரையரங்குகளில் நாளை படம் வெளியாக உள்ளது. நான்கு தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் தலைவரின் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அதற்கான கொண்டாட்டத்தை இன்றே தொடங்கிவிட்டோம். நாளை பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகி வருகிறோம் என்றார்.
ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தை வரவேற்கும் வகையில் மதுரை ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளதால், நாளை திரையரங்குகளில் ரசிகர்களின் உற்சாகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


