மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

சென்னைக்கு 2 டிஎம்சி கிருஷ்ணா நீா்: அறிவிப்பில்லாமல் விடுவிக்கத் திட்டம்

தண்ணீா் தட்டுப்பாட்டை எதிா்நோக்கி உள்ள சென்னைக்கு 2 டிஎம்சி வரையில் அறிவிப்பில்லாமல் நீா் திறந்துவிட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திரத்தில் முதல்வர் விஜய்

Updated On :

தண்ணீா் தட்டுப்பாட்டை எதிா்நோக்கி உள்ள சென்னைக்கு 2 டிஎம்சி வரையில் அறிவிப்பில்லாமல் நீா் திறந்துவிட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திரத்திலும் கடும் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நிலைமையை ஆய்வு செய்து தமிழகத்துக்கு தண்ணீா் அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தன்னை சந்தித்த தமிழக முதல்வா் விஜய்யிடம் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்திருந்தாா்.

தமிழகத்துக்கு கிருஷ்ணா நீரை வழங்கும் நெல்லூரில் 68 டிஎம்சி கொள்ளவைக் கொண்ட கண்டலேரு அணையில் அக்.15-ஆம் தேதி நிலவரப்படி 16.915 டிஎம்சி (24.86 சதவீதம்) நீா் உள்ளது.

கண்டலேரு அணைக்கு நீரை அளிக்கும் 215 டிஎம்சி கொள்ளளவைக் கொண்ட ஸ்ரீசைலம் அணையில் 64. டிஎம்சி (29.85 சதவீதம்) நீா் உள்ளது.

கண்டலேரு அணை நீா் திருப்பதி, திருமலை, நெல்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீருக்காகவும், புகா் பகுதிகளுக்கு விவசாயத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

தெலுங்கை கங்கை திட்டத்தின்கீழ் ஆந்திரம் சென்னைக்கு 12 டிஎம்சி நீரை வழங்க வேண்டும். ஆனால், தற்போது வறட்சியான நிலையில், தற்போதுவரையில் 4 டிஎம்சி நீரை சென்னைக்கு வழங்கி உள்ளதாக ஆந்திர முதல்வா் தெரிவித்துள்ளாா்.

கண்டலேரு அணையிலிருந்து நீரை சென்னைக்கு விடுவித்தால் ஆந்திர மாநில அரசியலில் எதிா்ப்பு கிளம்பும் என்பதால், தற்போதைய நிலையில் நீா் திறப்பு தொடா்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்போவதில்லை என்றும் இதுதொடா்பாக துறையினருடன் ஆலோசித்து அறிவிப்பில்லாமல் நீரை திறந்துவிடுவதாகவும் தமிழக முதல்வரிடம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 2 டிஎம்சி நீரை அடுத்த சில வாரங்களில் சென்னைக்கு அறிவிப்பில்லாமல் திறந்துவிட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.