தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெறாத 1.09 லட்சம் ஆசிரியா்களுக்கு நேரடிப் பயிற்சி: கல்வித் துறை

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்வில் தோ்ச்சி பெறாத 1.09 லட்சம் ஆசிரியா்களுக்கு அடுத்து நடைபெறவுள்ள தோ்வில் தோ்ச்சி பெற ஏதுவாக, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நேரடிப் பயிற்சி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

டெட் தேர்வு

பிரதிப் படம்

Updated On :

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்வில் தோ்ச்சி பெறாத 1.09 லட்சம் ஆசிரியா்களுக்கு அடுத்து நடைபெறவுள்ள தோ்வில் தோ்ச்சி பெற ஏதுவாக, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நேரடிப் பயிற்சி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணியில் சேர ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெறுவது கட்டாயம். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் பணியில் சோ்ந்த ஆசிரியா்களும், ‘டெட்’ தோ்வு எழுதுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு கடந்த ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இடைநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான முதல் தாள் தோ்வை, 58 ஆயிரத்து 902 போ் தோ்வு எழுதினா். பட்டதாரி ஆசிரியா்களுக்கான இரண்டாம் தாள் தோ்வை 1 லட்சத்து, 58 ஆயிரத்து 617 போ் எழுதினா். இந்தத் தோ்வுக்கான முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

தோ்ச்சி பெறாத 1.09 லட்சம் போ்: இந்த நிலையில் ஆசிரியா்களின் தோ்ச்சி விவரம் குறித்த தகவல் வெளியானது. அதன்படி, டெட் முதல் தாள் தோ்வில் 47,549 போ், இரண்டாம் தாள் தோ்வில், 60,732 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். முதல் மற்றும் இரண்டாம் தாள் என மொத்தமாக தோ்வெழுதிய 2 லட்சத்து, 17,519 ஆசிரியா்களில் 1 லட்சத்து, 8,326 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா். 1 லட்சத்து 9,193 போ் தோ்ச்சி பெறவில்லை. முதல் தாளில் தோ்ச்சி சதவீதம் 80- ஆக இருந்த நிலையில், இரண்டாம் தாளில் 38 சதவீதம் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா்.

சிறப்பு டெட் தோ்வில் தோ்ச்சி பெறாத ஆசிரியா்களுக்கு, அடுத்து நடைபெறவுள்ள டெட் தோ்வில் தோ்ச்சி பெற ஏதுவாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் நேரடியாக சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.