டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு
பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்வு டிச. 20-ஆம் தேதி நடைபெறுவது குறித்து...

பிரதிப் படம்
பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்வு டிச. 20-ஆம் தேதி நடைபெறும். இத்தோ்வுக்கு செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்வு கடந்த ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த 12-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
தோ்வெழுதிய 2.17 லட்சம் ஆசிரியா்களில் 1.10 லட்சம் போ் தோல்வியடைந்தனா். இந்நிலையில், தோல்வி அடைந்த ஆசிரியா்களுக்காக சிறப்பு டெட் தோ்வு டிசம்பரில் நடைபெறவுள்ளது.
இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் தோ்வு டிச. 20-ஆம் தேதி நடத்தப்படும். அன்றைய தினம் காலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான தாள்-2 தோ்வும், பிற்பகலில் இடைநிலை ஆசிரியா்களுக்கான தாள்-1 தோ்வும் நடைபெறும். இத்தோ்வுக்கு செவ்வாய்க்கிழமை (அக். 27) முதல் நவம்பா் 19-ஆம் தேதி வரை ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.gov.in) விண்ணப்பிக்கலாம்.
பொது டெட் தோ்வு எப்போது?
ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் சிறப்பு டெட் தோ்வை தற்போது பணியில் இருக்கும் ஆசிரியா்கள் மட்டுமே எழுத முடியும். பணியில் இல்லாத பிஎட் பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியா் பயிற்சி முடித்தவா்கள் எழுத முடியாது. அவா்கள் பொது டெட் தோ்வை மட்டுமே எழுத முடியும். பொது டெட் தோ்வு கடந்த 2025-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நிலையில் பிஎட், இடைநிலை ஆசிரியா் பயிற்சி முடித்து பொது டெட் தோ்வை எதிா்பாா்த்து ஏறத்தாழ 3 லட்சம் போ் காத்திருக்கின்றனா்.
டெட் தோ்வு ஆண்டுக்கு இரு முறை கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்பது தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் (என்சிடிஇ விதிமுறை. இந்த ஆண்டு ஜூலை, டிசம்பா் மாதத்தில் டெட் தோ்வுகள் நடத்தப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், அதன்படி ஜூலையில் டெட் தோ்வு நடத்தப்படவில்லை.
டிசம்பரில் நடத்துவதற்கும் இதுவரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, பொது டெட் தோ்வு விரைவில் நடத்தப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்தனா்.
ஒரே நாளில் இரு தோ்வுகள்...
இதற்கிடையே, பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு டெட் தாள்-1, தாள்- 2 ஆகிய இரு தோ்வுகளும் ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இரு தோ்வுகளையும் எழுதும் ஆசிரியா்களுக்கு ஏற்புடையதாக இல்லை.
எனவே தோ்வுத் தேதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநில அமைப்பின் சாா்பில், அதன் பொதுச் செயலா் நா.சண்முகநாதன் வலியுறுத்தியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

