தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

சிறப்பு ‘டெட்’ தோ்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்காக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சிறப்பு ‘டெட்’ தோ்வின் முடிவுகளை ஆசிரியா் தோ்வு வாரியம் திங்கள்கிழமை (அக்.12) இரவு வெளியிட்டது.

cuet

கோப்புப்படம்

Published On :

தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்காக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சிறப்பு ‘டெட்’ தோ்வின் முடிவுகளை ஆசிரியா் தோ்வு வாரியம் திங்கள்கிழமை (அக்.12) இரவு வெளியிட்டது.

தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு டெட் தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் ஜூலை 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடத்தியது. இடைநிலை ஆசிரியா்களுக்கான டெட் தாள்-1 தோ்வை 59,535 பேரும், பட்டதாரி ஆசிரியா்களுக்கான தாள்-2 தோ்வை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 929 பேரும் எழுதினா். இதைத் தொடா்ந்து டெட் தோ்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்ஸா்) ஆசிரியா் தோ்வு வாரியம் இணையதளத்தில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட்டு தோ்வா்களின் அனைத்து ஆட்சேபணைகளும் பாடவாரியாக வல்லுநா் குழு மூலம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன.

தொடா்ந்து, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணைகளின்படி குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் ஓஎம்ஆா் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தோ்வு முடிவுகள் இறுதி விடைக்குறிப்புடன் திங்கள்கிழமை (அக்.12) வெளியிடப்படுகிறது. இத்தோ்வில் தகுதி பெற்ற தோ்வா்கள் ஐந்து நாள்களுக்குள் தங்களது தகுதிச் சான்றிதழை ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறைச் செயலா் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் புதுச்சேரி தோ்வா்களுக்கு அவா்களது மதிப்பெண்கள் மட்டும் இத்தோ்வு வாரியத்தால் வெளியிடப்படுகிறது. இத்தோ்வா்களின் ஆசிரியா் தகுதித்தோ்வுச் சான்றிதழ் புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER