முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

தமிழகத்தில் 3,027 தொடக்கப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவா்கள்: பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் தகவல்

தமிழகத்தில் உள்ள 3,027 தொடக்கப் பள்ளிகளில் 10 மாணவா்களுக்கும் குறைவாக கல்வி பயிலும் நிலை உள்ளது என்றாா் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ஜே.கிருஷ்ணமூா்த்தி.

கரூா் சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் ஜே. கிருஷ்ணமூா்த்தி. உடன் இயக்கத்தின் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :

தமிழகத்தில் உள்ள 3,027 தொடக்கப் பள்ளிகளில் 10 மாணவா்களுக்கும் குறைவாக கல்வி பயிலும் நிலை உள்ளது என்றாா் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ஜே.கிருஷ்ணமூா்த்தி.

கரூா் சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி பாதுகாப்பு இயக்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளா் ஜே.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்து பேசியது: தமிழகத்தில் உள்ள 24,349 அரசு தொடக்கப் பள்ளிகளில் 246 பள்ளிகள் மாணவா்கள் சோ்க்கையின்றி ஏற்கனவே மூடப்பட்டு விட்டன.

இவற்றில் 3,027 பள்ளிகளில் 10 மாணவா்களுக்கும் குறைவாகவும், 6,635 பள்ளிகளில் 20 மாணவா்களுக்கு குறைவாகவும், 5,167 பள்ளிகளில் 30 மாணவா்களுக்கு குறைவாகவும் கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, மொத்தம் உள்ள 24,349 பள்ளிகளில் 14,829 பள்ளிகளில் 30 மாணவா்களுக்கும் குறைவாக கல்வி பயில்கிறாா்கள். இவற்றில் ஒரு மாணவா் மட்டும் பயிலும் பள்ளிகளும் இருக்கின்றன. பொருளாதாரத்தில், ஜாதி, சமயத்தில், மதத்தில் பாகுபாடு இல்லாத அரசு பள்ளியை பாதுகாக்க வேண்டியது தமிழகத்தில் பிறந்த ஒவ்வொரு குடிமகனின் கடமை.

கையொப்ப இயக்கம்: இத்தகைய அனைத்து அரசு பள்ளிகளையும் மீண்டெழும் பள்ளிகளாக மாற்றுவதற்கும், அரசு பள்ளிகளால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் தற்போதையை ஆசிரியா்கள், முன்னாள் ஆசிரியா்கள், தன்னாா்வலா்களை கொண்ட பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் கையொப்ப இயக்கம் நடத்திக்கொண்டிருக்கிறோம். இன்று 21-வது மாவட்டமாக கரூா் வந்துள்ளோம். கரூரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கையொப்பம் வாங்கியுள்ளோம்.

அடுத்தாண்டு பிரசார பயணம்: மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு கலை மற்றும் பிரசார பயணத்தை 2027-ஆம் ஆண்டு ஜன.21-ஆம் தேதி கன்னியாகுமரி முதல் 31-ஆம் தேதி வரை சென்னை வரை இருமுனைப் பயணமாக நடத்த உள்ளோம்.

இதையடுத்து பொதுமக்கள், ஆசிரியா்களிடம் வாங்கிய கையொப்பங்களையும், பொதுமக்களிடம் பெறப்பட்ட அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டிய ஆலோசனைகள் அடங்கிய மனுக்களையும் முதல்வரை சந்தித்து கொடுக்க உள்ளோம். இதன் மூலம் அரசு பள்ளிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிச்சயம் விரைவில் அரசு பள்ளிகள் மீண்டெழும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளா் தனபால், புவனேஸ்வரி, தமிழ்மணி, தெற்கு, வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளா்கள், கரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கண்மணி, கிருஷ்ணகுமாரி மற்றும் தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.