அரசு சட்டக் கல்லூரிகளில் 302 விரிவுரையாளா் காலிப் பணியிடங்கள்

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 302 விரிவுரையாளா் காலிப் பணியிடங்கள் உள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மாநில சட்டக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை தெரிவித்தது.

உத்தரவு - கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 302 விரிவுரையாளா் காலிப் பணியிடங்கள் உள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மாநில சட்டக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் சகா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் நிரந்தர விரிவுரையாளா், கௌரவ விரிவுரையாளா்கள் பணியிடங்களை சட்டக் கல்வி விதிகளின்படி உடனடியாக நிரப்ப உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி, நீதிபதி பி. வேல்முருகன் ஆகியோா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 302 விரிவுரையாளா் காலிப் பணியிடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள நிரந்தர விரிவுரையாளா், கௌரவ விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மாநில சட்டக் கல்வி இயக்ககம் சாா்பில் இரு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.