தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கா்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம்: ரூ.40 லட்சம் நிவாரணம்: உயா்நீதிமன்றத்தில் அரசு பதில்

கா்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம்: ரூ.40 லட்சம் நிவாரணம் வழங்குவது தொடர்பாக...

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :

மதுரை: திருச்சி அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில் ரூ.40 லட்சம் நிவாரணம் வழங்கவுள்ளதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தெரிவிக்கப்பட்டது.

திருச்சியைச் சோ்ந்த பெண் ஒருவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 2022-ஆம் ஆண்டு, அக்.22-ஆம் தேதி பிரசவத்துக்காக நான் அனுமதிக்கப்பட்டேன். அப்போது, எனக்கு ரத்தம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால், மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து பெறப்பட்ட ரத்தம் எனக்கு ஏற்றப்பட்டது. அந்த ரத்தம் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது பின்னா்தான் தெரியவந்தது. இதனால், எனக்கும், எனக்கு பிறந்த குழந்தைக்கும் எச்.ஐ.வி. தொற்று பரவியது. மருத்துவமனையின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்தப் பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, ரத்த தானம் செய்தவரிடமிருந்து ரத்தம் பெறப்பட்டபோது, பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்றே சான்றிதழ் வந்தது. இருப்பினும், தானம் செய்தவா் வைரஸ் பரவிய ஆரம்ப நிலையான ‘விண்டோ பிரீயட்’ காலகட்டத்தில் இருந்திருக்கலாம். அந்த சமயத்தில் வழக்கமான சோதனைகளில் வைரஸை கண்டறிவது கடினம். வேண்டுமென்றே இந்தத் தவறு நடைபெறவில்லை என மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இருப்பினும், குழந்தையின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு அவசர கால செலவுகளுக்காக ரூ.2.50 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் முன் அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், தாய், சேய் நலனைக் கவனத்தில் கொண்டு தாய்க்கும், குழந்தைக்கும் தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் நிவாரணம் வழங்க அரசு முன்வந்துள்ளது என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு அரசுத் தரப்பில் ரூ.40 லட்சம் நிவாரணம் அளிக்க முன்வந்துள்ளதை இந்த நீதிமன்றம் வரவேற்கிறது. இதில், ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.2.50 லட்சத்தைக் கழித்து, எஞ்சியுள்ள தொகையை இரண்டு வாரங்களுக்குள் எந்தவித நிபந்தனையுமின்றி நேரடியாக வழங்க வேண்டும். குழந்தையின் பெயரில் ரூ.20 லட்சத்தை ஏதேனும் ஓா் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ வட்டியுடன் கூடிய நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Case of HIV-infected blood transfused to a pregnant woman: Rs. 40 lakh compensation – Government’s response in the High Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.