ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து

தாம்பரம் - விழுப்புரம் இடையேயான மெமு ரயில் ஞாயிற்றுக்கிழமை (அக். 18) பகுதி ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

தாம்பரம் - விழுப்புரம் இடையேயான மெமு ரயில் ஞாயிற்றுக்கிழமை (அக். 18) பகுதி ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை ரயில்வே கோட்டத்திலுள்ள முண்டியம்பாக்கம் பணிமனையில் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (அக். 18) தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லவேண்டிய மெமு பயணிகள் ரயில் விக்கிரவாண்டி வரையே இயக்கப்படும்.

விழுப்புரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 18) பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படவேண்டிய மெமு பயணிகள் ரயில், அதற்குப் பதிலாக விக்கிரவாண்டி நிலையத்திலிருந்து பிற்பகல் 1.45 மணிக்குப் புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வந்து சேரும்.

தாமதப் புறப்பாடு: புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு தெலங்கானா மாநிலம் கச்சிகுடாவுக்குச் செல்லும் விரைவு ரயில் (எண்: 17654) ஞாயிற்றுக்கிழமை (அக். 18) பிற்பகல் 1.45 மணிக்குப் புறப்பட்டு செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.