திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
அன்பில் மகேஸ்ஸின் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்திருப்பது பற்றி...
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - கோப்புப் படம்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தருவதாக ரூ.100 கோடி மோசடி வழக்கில் அன்பில் மகேஸ்ஸின் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டபூா்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியாா் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா், முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவா் பி.டி.அரசகுமாா் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்கக் கோரி, முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்க காவல் துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எங்கம் தப்பிச் செல்ல மாட்டார், சாட்சிகளை கலைக்க மாட்டார், விசாரணைக்கு எப்போதும் ஆஜராவார்.
கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. கைதான மூவர் ஜாமீனில் விடுதலையில் உள்ளனர் என அன்பில் மகேஸ் தரப்பிலும், குற்றச்சாட்டுகள் தீவிரமானவை, ரூ.400 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. அன்பில் மகேஸுக்கு முன்ஜாமீன் தந்தால் எதுவும் வெளிவராது. அவரைக் காவலில் விசாரிக்க வேண்டியது அவசியம். வழக்கில் தொடர்புடைய முத்துக்குமாரை அன்பில் தான் பாதுகாக்கிறார் என காவல் துறை தரப்பிலும் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் அன்பில் மகேஸ் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Summary
The Madras High Court reserved its verdict indefinitely on former Minister Anbil Mahesh's anticipatory bail petition in the ₹100-crore private school recognition fraud case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


