நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

நிர்வாக முடிவுகளை எடுப்பதில் அரசுக்கு தடுமாற்றம் ஏன்? - அன்புமணி கேள்வி

நிர்வாக முடிவுகளை எடுப்பதில் அரசுக்கு தடுமாற்றம் ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பியிருப்பது குறித்து...

Anbumani Ramadoss Questions

பாமக தலைவர் அன்புமணி - எக்ஸ்

Updated On :

சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு1000 மின்பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் முதல் நாள் ரத்து செய்த அறிவிப்பை ஒப்பந்தப்புள்ளி நடைமுறை தொடரும் என்று அறிவித்துள்ள நிலையில், நிர்வாக முடிவுகளை எடுப்பதில் அரசுக்கு தடுமாற்றம் ஏன்? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் 'எக்ஸ்' பக்க பதிவில், சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவற்காக கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளியை கடந்த புதன்கிழமை ரத்து செய்த தமிழ்நாடு அரசு, அதற்கு அடுத்த நாளே ரத்து அறிவிப்பை ரத்து செய்து ஒப்பந்தப்புள்ளி நடைமுறை தொடரும் என்று அறிவித்துள்ளது. அரசு நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் இருப்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.

மாநகரப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கடந்த மார்ச் மாதம் கோரப்பட்டன. அதன்பின் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆட்சி மாற்றமும் ஏற்பட்ட நிலையில், ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு பல முறை ஒத்திவைக்கப்பட்டது இந்த நிலையில் நிர்வாகக் காரணங்களுக்காக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் அறிவிக்கை ரத்து செய்யப்படுவதாக கடந்த 14-ஆம் தேதி புதன் கிழமை தமிழக அரசு அறிவித்தது. அதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்யும் அறிவிப்பு தவறுதலாக வெளியிடப்பட்டு விட்டதாகவும், அதை திரும்பப்பெற்று ஒப்பந்தப்புள்ளி நடைமுறை தொடருவதாகவும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசால் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அரசுக்கே தெரியாமல் எவ்வாறு ரத்து செய்யப்படும் என்பது தெரியவில்லை. அரசின் எந்தவொரு முடிவாக இருந்தாலும் அது பிரிவு அலுவலர் முதல் இயக்குனர்கள்/ செயலாளர்கள் வரையிலான பல்வேறு அதிகாரிகளை கடந்து வர வேண்டும். எவரேனும் ஒருவர் தவறு செய்யலாம்; எல்லா அதிகாரிகளும் எவ்வாறு தவறு செய்ய முடியும்? எனவே, ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்படுவதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அதிகாரிகள் காரணம் அல்ல... கொள்கை முடிவு எடுக்கும் நிலையில் இருப்பவர்கள் தான் காரணம் ஆகும்.

உலக வங்கியுடன் திமுக அரசு செய்து கொண்ட மொத்த செலவு ஒப்பந்தத்தின் (Gross Cost Contract)அடிப்படையில் தான் மாநகரப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படுகின்றன. இது மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கவே வழிவகுக்கும் என்பதால் இதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இதே காரணத்திற்காகத் தான் அரசு இந்த ஒப்பந்தப்புள்ளி நடைமுறையை ரத்து செய்தது என்றால், அதில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். முடிவை மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அந்த மாநில அரசு நன்கு ஆராய்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பதும், அதில் உறுதியாக இருப்பதும் அவசியம் ஆகும். அவசரக் கோலம் அள்ளித் தெளித்தது போல முடிவுகளை எடுப்பதும், அதை உடனடியாக மாற்றுவதும் நிர்வாகத்திற்கு வலிமை சேர்க்காது. இனி வரும் காலங்களிலாவது அனைத்து முடிவுகளையும் அரசு ஆராய்ந்து எடுக்க வேண்டும்; அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Summary

The Tamil Nadu government cancelled the tender invited for the procurement of 1,000 electric buses for the Metropolitan Transport Corporation (MTC) in Chennai last Wednesday,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.