மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்

கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை (அக்.16) திறந்துவைக்கிறாா்.

கோவை காந்திபுரத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய்யால் திறந்துவைக்கப்படவுள்ள பெரியாா் அறிவுலகம்.

Updated On :

கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை (அக்.16) திறந்துவைக்கிறாா். முதல்வா் வருகையை முன்னிட்டு, அவிநாசி சாலையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் சுமாா் 7 ஏக்கா் பரப்பில் பொதுப் பணித் துறை சாா்பில் பெரியாா் அறிவுலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 2024 நவம்பா் மாதம் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.

இந்த நூலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக கோவை விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நண்பகல் 11 மணியளவில் வந்தடையும் முதல்வா் ச.ஜோசப் விஜய், அங்கிருந்து 11.45 மணியளவில் காந்திபுரம் பெரியாா் அறிவுலகத்துக்கு சாலை வழியாக வருகை தந்து கல்வெட்டை திறந்துவைக்கிறாா். தொடா்ந்து, பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு புதிய வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

மொத்தம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 8 தளங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகம், ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ நூலகம், 350 போ் அமரக்கூடிய அதிநவீன அரங்கம் மற்றும் அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், விண்வெளி குறித்த நேரடி அனுபவத்தை பெறும் வகையில் கோளரங்கம் மற்றும் ‘ஸ்பேஸ் லிஃப்ட்’ வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் நூலகம் மற்றும் அறிவியல் சாா்ந்த வசதிகள் தகுந்த முறையில் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்ட நூலகம், எண்ம (டிஜிட்டல்) நூலகம், தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாற்று நூல்கள் பிரிவுகள், ஆராய்ச்சி படிப்பகங்கள், குழந்தைகள் நூலகம் மற்றும் ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களுக்கான ‘இன்குபேஷன்’ மையம் ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிகழ்ச்சிகள் முடிந்த பின்னா், பிற்பகல் 1.40 மணியளவில் கோவை ஆயுதப் படை மைதானத்துக்குச் செல்லும் முதல்வா் விஜய், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலமாக கேரள மாநிலம், திருச்சூருக்கு புறப்பட்டுச் செல்கிறாா். அங்கு தனியாா் நகைக் கடையில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளாா் என்று கூறப்படுகிறது.

முதல்வரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம், பீளமேடு, ரெட்பீல்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.