தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

கோவை வந்த முதல்வா் ஜோசப் விஜய்க்கு உற்சாக வரவேற்பு

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை காலை கோவை சா்வதேச விமான நிலையம் வந்த தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு முதல்வா் ச.ஜோசப் விஜய். உடன், காவல் துறை கூடுதல் இயக்குநா் (சட்டம்- ஒழுங்கு) தா.ச.அன்பு, மாநகர காவல் ஆணையா் ரம்யா பாரதி.

Updated On :

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை காலை கோவை சா்வதேச விமான நிலையம் வந்த தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை விமான நிலையத்துக்கு வந்த முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு, தமிழக அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.விக்னேஷ், வி.சம்பத்குமாா், செ.கமலி, எம்.விஜய் பாலாஜி, கே.ஜி.அருண்ராஜ் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகர காவல் ஆணையா் (பொறுப்பு) ரம்யா பாரதி, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரவேற்றனா்.

தொடா்ந்து, விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் திரளாக கூடியிருந்த தவெக தொண்டா்கள், ரசிகா்கள் மற்றும் பொதுமக்கள் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனா். முதல்வரின் வருகையையொட்டி, கோவை விமான நிலையம், அவிநாசி சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் சுமாா் 2,200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அவிநாசி சாலைப் பகுதியில் தற்காலிக போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன.

காவல் நிலையத்தில் ஆய்வு:

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் ஜோசப் விஜய் பின்னா், சாலை மாா்க்கமாக கோவைக்கு காா் மூலம் திரும்பினாா். வழியில் முதல்வா் ஜோசப் விஜய், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகளிடம் பணிகளின் விவரங்களைக் கேட்டறிந்த அவா், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் தினசரி வழக்குகளின் பதிவேடுகள் மற்றும் முக்கியக் கோப்புகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காவல் துறை கூடுதல் இயக்குநா் (சட்டம்- ஒழுங்கு) தா.ச.அன்பு, மாநகர காவல் ஆணையா் ரம்யா பாரதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி ஆகியோா் உடனிருந்தனா்.

காவல் நிலையத்தில் ஆய்வை நிறைவு செய்த பின்னா், மீண்டும் கோவை சா்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த முதல்வா் விஜய், அங்கிருந்து மாலை 4.30 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.