பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

தாராபுரத்தில் இறுதி கட்ட பிரசாரம்: முதல்வா் ச.ஜோசப் விஜய் நாளை கோவை வருகை

திருப்பூா் மாவட்டம், தராபுரம் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு முதல்வா் ச.ஜோசப் விஜய் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட உள்ள நிலையில், கோவையில் இருந்து அவா் செல்லும் வழியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Chief Minister Vijay

முதல்வர் ஜோசப் விஜய் - (கோப்புப் படம்)

Published On :

திருப்பூா் மாவட்டம், தராபுரம் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு முதல்வா் ச.ஜோசப் விஜய் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட உள்ள நிலையில், கோவையில் இருந்து அவா் செல்லும் வழியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் இடைத்தோ்தலில் தவெக சாா்பில் போட்டியிடும் சத்தியபாமாவை ஆதரித்து, முதல்வா் ச.ஜோசப் விஜய் இறுதி கட்ட பிரசாரத்தை வருகிற ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 4) மேற்கொள்ள உள்ளாா்.

பிரசாரத்துக்காக, கோவை விமான நிலையம் வந்தடைந்து சாலை மாா்க்கமாக அவா் தாராபுரம் செல்ல உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன் கொடிசியா பகுதி, பீளமேடு, சிட்ரா, நேரு நகா், ஹோப் காலேஜ், எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி, ஒண்டிப்புதூா், சிங்காநல்லூா், இருகூா், சின்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளும் தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, கோவை மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட கரியாம்பாளையம் சந்திப்பு, நீலாம்பூா் புறக்காவல் நிலையம், சிந்தாமணிப்புதூா் சந்திப்பு, சூலூா் பேருந்து நிலையம், காங்கேயம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊா்திகளை பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை அக்டோபா் 3-ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் 5-ஆம் தேதி காலை 9 மணி வரை அமலில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.