ஆவடி அருகே மின் கம்பி அறுந்து காவலாளி பலி!
திருநின்றவூரில் மின் கம்பி அறுந்து காவலாளி உயிரிழந்தது பற்றி...

பலி - கோப்புப் படம்
ஆவடி அருகே திருநின்றவூரில் உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் உடல் கருகி காவலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
பூந்தமல்லி நசரத்பேட்டை வரதராஜபுரம் டி. ஆர். ஆர். நகரைச் சேர்ந்தவர் கண்ணையன் (60). இவர், திருவள்ளூர் அருகே புலியூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை கண்ணையன் வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்பட்டார். இவர், பூந்தமல்லி இருந்து திருநின்றவூருக்கு அரசு பேருந்தில் வந்து இறங்கினார்.
பின்னர் அவர் அங்கிருந்து புலியூர் செல்ல திருநின்றவூர் காந்தி சிலை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிறுத்தத்தின் மேலே சென்ற உயரழுத்த மின் கம்பி திடீரென அறுந்து கண்ணையன் காலில் விழுந்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி கண்ணையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து திருநின்றவூர் போலீஸார் விரைந்து வந்து கண்ணையன் சடலத்தை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகார் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பாலகுரு தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

