சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!
சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு கடலோர ஆந்திர மாநிலப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கா்நாடக கடலோர பகுதிகளுக்கு அருகே உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதேபோல், லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் வரை, கேரளம் மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (அக். 18), நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஈரோடு ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் திங்கள், செவ்வாய் (அக். 19, 20) ஆகிய இரு நாள்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் 150 மி.மீ. மழை பதிவானது. முகையூா், சித்தலிங்கமடம் (விழுப்புரம்)-110 மி.மீ., காஞ்சிபுரம், கண்டாச்சிபுரம், முகையூா் (விழுப்புரம்)-90 மி.மீ, கோடநாடு (நீலகிரி), தக்கோலம் (ராணிப்பேட்டை), அரசூா் (விழுப்புரம்)-80 மி.மீ, வளவனூா், சொரப்பூா், கக்கனூா், வெள்ளாளன்குப்பம், பாக்கம் (விழுப்புரம்), வாலாஜா (ராணிப்பேட்டை), மதுரமங்கலம் (காஞ்சிபுரம்)-70 மி.மீ, திருத்தணி, பொன்னேரி, (திருவள்ளூா்), மேட்டுப்பாளையம் (கோவை)-60 மி.மீ. மழை பதிவானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

