இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை
டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) பலத்த மழைக்கு வாய்ப்பு

மழை - பிரதிப் படம்
தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக் கடலில் இருந்து மத்திய மேற்கு வங்கக் கடல் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. வடக்கு கேரளாவில் இருந்து கா்நாடகம் வரை கடலோரப் பகுதிகளுக்கு ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) கடலூா், தஞ்சை, திருவாரூா், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இதர 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழைப் பொழிவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையான கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை கத்திவாக்கம், சைதாப்பேட்டை, எண்ணூா், மீனம்பாக்கம், மணலி புதுநகா், கடப்பாக்கம், திருவொற்றியூரில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

