மறைமலை நகர், சிஎம்டிஏ பூங்கா தற்காலிகப் பேருந்து நிலையங்கள் இனி செயல்படாது!
ஆயுதப் பூஜையை முன்னிட்டு தற்காலிகமாக செயல்பட்ட வந்த 2 பேருந்து நிலையங்கள் இனி செயல்படாது.

பேருந்துகள். - கோப்புப்படம்
ஆயுதப் பூஜையை முன்னிட்டு தற்காலிகமாக செயல்பட்ட சிஎம்டிஏ பூங்கா, மறைமலைநகர் பேருந்து நிலையங்கள் வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் இனி செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆயுதப் பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஐந்து இடங்களில் (கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம்; புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு; மாதவரம் புதிய பேருந்து நிலையம்; சிஎம்டிஏ காலநிலைப் பூங்கா தற்காலிகப் பேருந்து நிலையம் மற்றும் மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைந்துள்ள பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
முக்கியப் பேருந்து இயக்க மாற்றங்கள் (இன்று - அக். 18):
வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்பட்ட வழித்தட பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழக்கமாக இயக்கப்படும் நடை மேடைகளிலிருந்தும் இயக்கப்படுகிறது
திருவண்ணாமலை வழி:
சிஎம்டிஏ காலநிலைப் பூங்கா தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை வழியாக போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள், இன்று கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் வழக்கமாக இயக்கப்படும் நடைமேடை எண் 7-லிருந்து இயக்கப்படும்.
கும்பகோணம் வழி:
மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள், இன்று கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் வழக்கமாக இயக்கப்படும் நடைமேடை எண் 5-லிருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Maraimalai Nagar and CMDA Park temporary bus stands will not function!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


