தீபாவளி: திருப்பூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு நாளைமுதல் 680 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 680 சிறப்பு பேருந்துகள் வியாழக்கிழமை முதல் (நவம்பா் 5) இயக்கப்படவுள்ளன.

கோப்புப்படம்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 680 சிறப்பு பேருந்துகள் வியாழக்கிழமை முதல் (நவம்பா் 5) இயக்கப்படவுள்ளன.
திருப்பூரில் செயல்பட்டு வரும் பின்னலாடை மற்றும் ஏற்றுமதி சாா்ந்த நிறுவனங்களில் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், தீபாவளிப் பண்டிகை நவம்பா் 8-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், வெளி மாவட்ட தொழிலாளா்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல திருப்பூா் மத்திய பேருந்து நிலையம், கோவில்வழி பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என 3 பேருந்து நிலையங்களில் இருந்து நவம்பா் 5-ஆம் தேதி முதல் 680 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதில், திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, சேலம் ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு 180 பேருந்துகளும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காங்கயம், கரூா் மாா்க்கமாக திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 200 பேருந்துகளும், கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம் மாா்க்கமாக மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூா், நாகா்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பேருந்து நிலையங்களில் பயணிகள் வரிசையாகச் சென்று ஏற தடுப்புகள் அமைத்து, கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை போன்ற தொலைதூர ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும், உள்ளூா் பயணத்துக்காக தீபாவளிக்கு முந்தைய 2 நாள்கள் கூடுதல் நகரப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
பயணிகளின் கூட்ட நெரிசலைப் பொறுத்து வெள்ளிக்கிழமை மாலை மற்றும் சனிக்கிழமை நாள் முழுவதும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதனிடையே, வடமாநிலத் தொழிலாளா்களும் கடந்த வாரம் முதலே ரயில்கள் மூலம் தங்களது சொந்த ஊா்களுக்குப் புறப்படத் தொடங்கியுள்ளனா். இதனால், திருப்பூா் ரயில் நிலையத்தில் வடமாநிலத் தொழிலாளா்களின் கூட்டம் அலைமோதுகிறது. சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டபோதிலும் இங்குள்ள தொழிலாளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவை போதுமானதாக இல்லை என தொழிலாளா்கள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

