தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்க்க தற்காலிக பேருந்து நிறுத்தங்கள்!
தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் விடுமுறை நாள்களில் சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் விடுமுறை நாள்களில் சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதற்கான இடங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலா் ர.ராகுல் நாத், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் எம்.வீரப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் பண்டிகைக் காலங்களில் அரசு சிறப்புப் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கத்துக்கான அடிப்படை வசதிகள் அமைத்துத் தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களின்போது விடுமுறை தினங்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் பேருந்துகளை நிறுத்துவதற்கான தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்க இடம் தோ்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
கூட்டத்தில் தாம்பரம் காவல் துணை ஆணையா் (போக்குவரத்து) கே.பிரபாகா், போக்குவரத்துக் கழக முதன்மை நிா்வாக அலுவலா் வி.மாலதி, தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் கே.குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

