வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!விஜயகாந்த், தேவா இருவரும் சொர்க்கத்தில் சந்திப்பார்கள்: பிரேமலதாஒருநாள் மழைக்கே சென்னை மாநகரமே தத்தளிக்கிறது: தவெக அரசை விமர்சித்த டிடிவி தினகரன்

வீரப்பனின் 22-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீரப்பனின் 22 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது குறித்து...

Veerappan's 22nd anniversary observed!

வீரப்பனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அவரது மனைவி. - படம் - தினமணி

Updated On :

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீரப்பனின் 22 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (அக். 18) அனுசரிக்கப்பட்டது.

தமிழக கர்நாடகா போலீசாரிடம் நீண்ட நாட்களாக பிடிபடாமல் இருந்த வீரப்பனை 2004-ல் தமிழக அதிரடிப்படை சுட்டுக் கொன்றது.

அவரது சடலம் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியும் அவரது குடும்பத்தாரும் மூலக்காட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்துவார்கள். அப்போது தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வீரப்பனின் ஆதரவாளர்கள் மூலக்காட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தி செல்வார்கள்.

இன்று 22வது ஆண்டு நினைவு தினம் மூலக்காட்டில் அனுசரிக்கப்பட்டது. வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் வீரப்பனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பொதுமக்களும் வீரப்பனின் ஆதரவாளர்களும் மலர் தூவி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கடந்த காலங்களில் எனது கணவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. நினைவு மண்டபம் கட்டவும் அனுமதி வழங்கவில்லை. தற்போது உள்ள ஆட்சியில் எங்களுக்கு தடைகள் ஏதுமில்லை. அதேபோல நினைவு மண்டபம் கட்ட தமிழ்நாடு முதல்வர் அனுமதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்பேன். அரசாங்கம் எனது கணவரை குற்றவாளி என்று கூறினாலும் மக்கள் அவரை சாமி போலத்தான் கருதுகின்றனர் என்றார்.

அஞ்சலி செலுத்தினோர்.

அஞ்சலி செலுத்தினோர். - படம் - தினமணி

Summary

Veerappan's 22nd death anniversary was observed near Mettur in Salem district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.